Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலா குறித்த ஆய்வுகளில் சீன விண்வெளி நிலையத்துடன் கூட்டாகச் செயல்பட விரும்பும் நாஸா

அமெரிக்கா,சீனா ஆகியவற்றின் விண்வெளி நிறுவனங்கள், நிலாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பயண முயற்சிகளை ஒருங்கிணைப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வுநிறுவனமான நாஸா (NASA) தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
நிலா குறித்த ஆய்வுகளில் சீன விண்வெளி நிலையத்துடன் கூட்டாகச் செயல்பட விரும்பும் நாஸா

படம்: AFP/Robyn Beck

அமெரிக்கா,சீனா ஆகியவற்றின் விண்வெளி நிறுவனங்கள், நிலாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பயண முயற்சிகளை ஒருங்கிணைப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வுநிறுவனமான நாஸா (NASA) தெரிவித்தது.

அதற்கு உறுதியான சட்டக் கட்டமைப்பை வரையறுத்து வருவதாக நாஸா கூறியது.

தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும்,  தொழில்நுட்பக் கூறுகள் சீனாவிற்கு மாற்றப்படுவதைத் தவிர்பதும் நோக்கங்கள் என்று அது தெரிவித்தது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு,  Chang'e 4 என்னும் விண்கலம் தரையிறங்குவதை நாஸாவின் விண்கலக் கருவி மூலம்  பார்க்கும் சாத்தியம் குறித்து சீனாவுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அது குறிப்பிட்டது.

சீன விண்கலம் இம்மாதம் 3ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்கியது.

நாஸா விண்கலம் இம்மாதம் 31ஆம் தேதி அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது அதன் படங்களை எடுத்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்