Images
  • mac
    படம்: YouTube/remotedarren

'நாசி லம்மாக்' சாப்பிட 9,600 கிலோமீட்டர் பயணம் செய்தவர்

பிடித்த உணவைச் சாப்பிட எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள்?

இங்கிலாந்தைச் சேர்ந்த 45 வயது ஆடவர் ஒருவர் 9,600 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார்.

கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ்ஸில் (Athens) சுற்றுலா மேற்கொண்டிருந்தார் டெரன் குரோனியன் (Darren Cronian) என்னும் ஆங்கிலேயர்.

அப்போது Instagramஇல் எதேச்சையாக 'நாசி லம்மாக்' (nasi lemak) உணவைப் பார்த்திருக்கிறார் குரோனியன்.

உடனே அதை ருசித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற அடக்கமுடியா ஆசையால் உந்தப்பட்ட அவர், உடனே மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானச்சீட்டுகளை வாங்கினார்.

YouTubeஇல் காணொளிகளைப் பதிவு செய்யும் அவர் தம்முடைய பயணத்தையும் அதில் பதிவுசெய்தார்.

குரோனியன் தம்முடைய பயணத்தின்போது சிங்கப்பூரிலும் 6 மணி நேரம் செலவிட்டார்.

கோலாலாம்பூரை அடைந்தவுடன் குரோனியன் 'நாசி லம்மாக்கை' ஒரு பிடி பிடித்தார்.

Malay Mail தகவல்படி, 'நாசி லம்மாக்கை' ருசிப்பதற்காக மேற்கொண்ட நீண்ட பயணத்தில், சோர்வே தெரியவில்லை என்று அவர் கூறினாராம்.


Top