Images
  • nawa zph
    படம்: AFP/Aamir Qureshi

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-உம், அவரது மகள் மர்யாமும், லண்டனிலிருந்து நாடு திரும்பியவுடன் லாகூரில் கைதுசெய்யப்பட்டனர்.

திரு. நவாஸ் லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் தமது மனைவியைக் காணச்சென்றிருந்தார்.

இம்மாதம் 25ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

கருத்துக் கணிப்புகள் திரு. நவாஸின் கட்சி முன்னணியை இழக்கும் என்று தெரிவித்திருந்தன.

அதையடுத்து, கட்சியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, திரு. நவாஸ் நாடுதிரும்பினார்.

சென்ற வாரம் அவர் லண்டனில் இருந்தபோதே, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திரு. நவாஸும், அவரது மகளும், விமானத்திலிருந்து இறங்கியவுடன், சீருடையில் இருந்த அதிகாரிகள் அவர்களைச் சுற்றிவளைத்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு ஆதரவாகப் பொதுத் தேர்தல் முடிவுகள் அமையும்பொருட்டு, இராணுவம் தம்மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் குறைகூறினார்.
 

உங்கள் கருத்து

Top