Images
  • nepal
    (படம்: AFP / Prakash MATHEMA)

நேப்பாளத்தில் தொடர்ந்து ஒரு வாரமாகக் கணிசமாக அதிகரிக்கும் கிருமிப்பரவல்

நேப்பாளத்தில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

7 நாள்களில் பதிவான சராசரி விகிதம் 1,200 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எளிதில் தொற்றக்கூடிய கிருமி வகை, பக்கத்து நாடான இந்தியாவிலிருந்து நேப்பாளத்திற்குப் பரவுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே எல்லை திறந்திருப்பது அதற்குக் காரணம்.

இந்தியாவில் நோய்ப்பரவல் மோசமடைவதால், அங்குள்ள நேப்பாள ஊழியர்கள் நாடு திரும்புகின்றனர்.

நேற்று புதிதாக 7,300க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

நேப்பாளத்தில் இதுவரை 340,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் மருந்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பெரிய நகரங்களில் 15 நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் நேப்பாளத்தில் அனைத்துலக விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.  

Top