Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலநடுக்கத்திற்குப் பிறகு நேப்பாளத்தில் மறுநிர்மாணப் பணிகள்

நேப்பாளத்தில் மூன்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மறுநிர்மாணப் பணிகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
நிலநடுக்கத்திற்குப் பிறகு நேப்பாளத்தில் மறுநிர்மாணப் பணிகள்

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் சிதைவுகளுக்கிடையே சிக்கியிருப்பவர்களைத் தேடும் முயற்சி. (படம்: AFP)

நேப்பாளத்தில் மூன்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மறுநிர்மாணப் பணிகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நேப்பாளத்தில் பல புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஆனால், மறுநிர்மாணத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது பில்லியன் டாலர் தொகை, மேம்பட்ட வகையில் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பதிலாக, பழைய வீடுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.

அரசியல் பூசல், அதிகாரத்துவ நிர்வாகம், குழப்பம் ஆகிய பிரச்சனைகளால் மறுநிர்மாணப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டுக்குள் மறுநிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நேப்பாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், வீடுகளைக் கட்டுவதற்கு மட்டும், இன்னும் ஒரு பில்லியன் டாலர் தேவைப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்