Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நேப்பாளத்தில் நிலச்சரிவு - 9 பேர் மரணம்

நேப்பாளத்தில் நிலச்சரிவு - 9 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
நேப்பாளத்தில் நிலச்சரிவு - 9 பேர் மரணம்

படம்: AFP

நேப்பாளத்தில் கனத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் மாண்டனர்.

நிலச்சரிவு நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்டது.

மாண்ட 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மூன்று பேர் குழந்தைகள், மூன்று பேர் பெண்கள்.

நிலச்சரிவு நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டதாகவும் மாண்டவர்கள் அப்போது தூங்கிக்கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேப்பாளத்தில் பருவமழைக் காலத்தின்போது வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம்.

நேப்பாளத்திற்கு அருகே உள்ள இந்திய மாநிலங்களான பீஹாரும் அஸாமும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் இரு மாநிலங்களின் சுமார் 9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்; 111 பேர் மாண்டனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்