Images
  • Snow
    ( படம்: AFP )

நேப்பாளத்தில் பனிப் புயல்: 8 மலையேறிகள் மரணம்

நேப்பாளத்தின் குர்ஜா சிகரத்தில் ஏற்பட்ட திடீர் பனிப் புயலில் சிக்கி 8 மலையேறிகள் மாண்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த மலையேறிகள் குர்ஜா சிகரத்தின் அடிவாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தபோது பனிப் புயல் தாக்கியதாக நம்பப்படுகிறது.

மாண்ட 8 பேரில் நேப்பாள வழிகாட்டிகளும் அடங்குவர்.

சிதறிக் கிடந்த அவர்களின் சடலங்களை, இன்று அதிகாலையில் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இன்னும் ஒருவரைக் காணவில்லை என நம்பப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, மீட்புப்பணியில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மீட்புகுழுவினர் குறிப்பிட்டனர்.

மீட்புப்பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவதாகவும், அது நாளையும் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் ஆக உயரமான 14 மலைச் சிகரங்களில் 8 நேப்பாளத்தில் உள்ளன.

அதில் ஏற, ஒவ்வொர் ஆண்டும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மலையேறிகள் வருவது வழக்கம்.
 

Top