Images
  • Netflix Asia (1)

ஆசியாவின் 17 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறது Netflix

Netflix நிறுவனம், ஆசிய வட்டாரத்தில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்ற 17 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறது.

உலக அளவில் அதன் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அந்த நிறுவனம் திட்டம் கொண்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் இணையம்வழி ஒளிபரப்பும் Netflix, சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது திட்டத்தை வெளியிட்டது.

அதன் காலாண்டு வளர்ச்சி பற்றி அந்த நிறுவனம் கடந்த மாதம் தகவல் அளித்தது.

அமெரிக்காவிலும் அனைத்துலகச் சந்தைகளிலும் எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி அதிகமாகப் பதிவானதாக அது தெரிவித்தது.

Netflix சேவையில் புதிததாகப் பதிந்துகொண்டவர்களில் பெரும்பாலோர், அமெரிக்காவுக்கு வெளியில் தளம் கொண்டவர்கள்.

வெளிநாட்டுச் சந்தைகளிலேயே அந்த நிறுவனம் அதிகம் முதலீடு செய்துவருகிறது.

 

Top