Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியப் பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பதைப் பற்றிப் பேச்சுவார்த்தை

பாரதீய ஜனதா கட்சி பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருப்பதையடுத்து அவர் அந்தக் கூட்டத்தை நடத்துகிறார்.

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பதைப் பற்றிப் பேச்சுவார்த்தை

(கோப்புப் படம்: Reuters)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதிய அமைச்சரவை அமைப்பது பற்றி அமைச்சர்களிடமும், கூட்டணிக் கட்சிகளுடனும் பேச்சு நடத்திவருகிறார்.

பாரதீய ஜனதா கட்சி பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருப்பதையடுத்து அவர் அந்தக் கூட்டத்தை நடத்துகிறார்.

அந்தக் கட்சி 303 இடங்களில் தனித்து வெற்றிபெற்றிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

எதிர்த் தரப்புக் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிட்டின.

திரு. மோடி இம்மாதம் 30ஆம் தேதி பதவியேற்கக்கூடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

1984ஆம் ஆண்டுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் அடுத்தடுத்த தவணைக் காலத்திற்கு ஆட்சியமைக்கும் பெருமை பாரதீய ஜனதாவைச் சாரும்.

தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மக்களின் கவனம் மெதுவடையும் பொருளியல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களின் பக்கம் திரும்புகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்