Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புது டில்லியில் அடுத்த ஒரு வாரத்துக்கு முடக்கநிலை நீடிக்கும்

இந்தியத் தலைநகர் புது டில்லியில் அடுத்த ஒரு வாரத்துக்கு முடக்கநிலை நீடிக்கும் என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தமது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
புது டில்லியில் அடுத்த ஒரு வாரத்துக்கு முடக்கநிலை நீடிக்கும்

(படம்: AFP)

இந்தியத் தலைநகர் புது டில்லியில் அடுத்த ஒரு வாரத்துக்கு முடக்கநிலை நீடிக்கும் என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தமது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது நடப்பில் இருக்கும் முடக்கநிலை நாளை முடிவடைகிறது.

எனினும், கிருமிப்பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் முடக்கநிலையை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புது டில்லியில் இதுவரை இல்லாத அளவில் 27,000 பேரிடம் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

375 பேர் மாண்டனர்.

எனினும், எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று சுமார் 400,000 ஆகப் பதிவானது.

இனிவரும் நாள்களில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்