Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் தரையிறங்க அனுமதியில்லாததால் திருப்பிவிடப்பட்ட விமானம்

ஆக்லந்திலிருந்து ஷங்ஹாய் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் நியூஸிலந்தின் NZ289  விமானம் புறப்பட்ட சில மணிநேரத்தில் திருப்பிவிடப்பட்டது. 

வாசிப்புநேரம் -
சீனாவில் தரையிறங்க அனுமதியில்லாததால் திருப்பிவிடப்பட்ட விமானம்

படம்: REUTERS/Daniel Munoz

ஆக்லந்திலிருந்து ஷங்ஹாய் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் நியூஸிலந்தின் NZ289  விமானம் புறப்பட்ட சில மணிநேரத்தில் திருப்பிவிடப்பட்டது. 

சீனாவில் தரையிறங்க அதற்கு அனுமதி இல்லாதது அதற்குக் காரணம்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்குவதில் அந்த விமானத்திற்குச் சிக்கல் உண்டானதாக ஏர்  நியூஸிலந்து நிறுவனம் தெரிவித்தது.

விமானத்தில் சுமார் 270 பயணிகள் இருந்தனர்.

விமான நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஷங்ஹாய் செல்வதற்கு சிறப்புச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அது உறுதியளித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்