Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முதல்முறையாக வழக்கத்தை மாற்றிய வடகொரிய அரசாங்க ஊடகங்கள்

முதல்முறையாக வழக்கத்தை மாற்றிய வடகொரிய அரசாங்க ஊடகங்கள்

வாசிப்புநேரம் -
முதல்முறையாக வழக்கத்தை மாற்றிய வடகொரிய அரசாங்க ஊடகங்கள்

படம்: AFP

வடகொரிய அரசாங்க ஊடகங்கள், தலைவர் கிம் ஜோங் உன்னின் சிங்கப்பூர்ப் பயணம் பற்றிய செய்திகளை அவர் சிங்கப்பூரில் இருக்கும்போதே வெளியிட்டுள்ளன.

இது வழக்கத்துக்கு மாறானது.

பொதுவாகத் திரு. கிம் வெளிநாட்டுக்குச் சென்றால், பியோங்யாங்கிற்கு அவர் பாதுகாப்பாகத் திரும்பிவரும் வரை, அவரது பயணம் பற்றிய செய்திகளை, அரசாங்க ஊடகங்கள் வெளியிட மாட்டா.

ஆனால் அந்த வழக்கத்தைத் தற்போது அந்நாட்டு ஊடகங்கள் மீறியுள்ளன.

திரு. கிம்மின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பிற்கான முக்கியக் காரணங்கள் பற்றியும், பிற நாடுகளோடு அரசதந்திர உறவை ஏற்படுத்திக் கொள்வது பற்றியும் வெளிப்படையாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. கிம் எப்போது சிங்கப்பூர் புறப்பட்டார், எப்படி வந்தார், பிரதமர் லீயோடு நடைபெற்ற சந்திப்பு-இவைபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திரு. கிம் சீனாவுக்கு சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு பயணங்கள் பற்றிய செய்தி கூட, அவர் நாட்டிற்குத் திரும்பி வந்தவுடன்தான் வெளியிடப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்