Images
  • nk missile (1)
    (படம்: AFP)

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை இன்று காலை பாய்ச்சியது: தென்கொரியா

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை இன்று காலை பாய்ச்சியதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.

அணுசக்தி தொடர்பான பேச்சுகளை அமெரிக்காவுடன் தொடர்வதற்கு ஆர்வம் தெரிவித்த ஒரு நாளுக்குள், வடகொரியா ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாய் வடகொரியா கூறியிருந்தது.

ஆனால் அமெரிக்கா புதிய அணுகுமுறையைக் கையாண்டால் ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளப்படாத நிலை ஏற்படலாம் என அது எச்சரித்தது.

Top