Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியாவின் புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனை மிக அடிப்படையானது: வடகொரியா

வடகொரியா, அண்மையில் இடம்பெற்ற தென்கொரியாவின் புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனை மிக அடிப்படையானதென்று கூறியுள்ளது. 

வாசிப்புநேரம் -

வடகொரியா, அண்மையில் இடம்பெற்ற தென்கொரியாவின் புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனை மிக அடிப்படையானதென்று கூறியுள்ளது.

கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலைக்க எடுக்கப்படும் முயற்சிகள் மெதுவடைந்துள்ளன.

இவ்வேளையில், தென்கொரியா, வடகொரியா ஆகிய இருதரப்பும் தொடர்ந்து அவற்றின் ஆயுதங்களை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டுவருகின்றன.

வடகொரியாவின் தேசியப் பாதுகாப்பு அறிவியல் நிலையத்தின் தலைவர், ஜாங் சாங் ஹா (Jang Chang Ha) தென்கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த ஏவுகணையின் அமைப்பு சரிவரத் தயாரிக்கப்படாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தென்கொரியா அவ்வாறு தொடர்ந்து நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த ஆயுத அமைப்புகளை மேம்படுத்த முயற்சி செய்வதால், கொரியத் தீபகற்பத்தில் ராணுவ அடிப்படையில் பதற்றம் எழக்கூடும் என்றும் திரு ஜாங் எச்சரித்துள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்