Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையில் திருமணத் தம்பதி முத்தமிடத் தடை

இலங்கையில் நடமாட்டத் தடை படிப்படியாக மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. 

வாசிப்புநேரம் -
இலங்கையில் திருமணத் தம்பதி முத்தமிடத் தடை

(படம்: Pixabay)

இலங்கையில் நடமாட்டத் தடை படிப்படியாக மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

இருப்பினும், பொது இடத்தில் மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு முத்தமிடக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொதுவாக இலங்கையில் திருமணங்கள் பெரும் திருவிழா போல சில தினங்கள் கொண்டாடப்படுவதுண்டு.

ஆயிரக்கணக்கான விருந்தாளிகள், ஆட்டம் பாட்டம் உணவு என்று களைகட்டும் திருமண விழாக்கள் இலங்கையில் இயல்பாகத் தென்படும் ஒன்று.

ஆனால், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளால், 100 விருந்தினர்களுடன், பாதுகாப்பான இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிந்து திருமணங்கள் நடைபெறுகின்றன.

திருமணத் தம்பதி உட்பட திருமணத்துக்கு வரும் ஒருவரும் கை குலுக்கவோ, கட்டியணைக்கவோ, முத்தமிடவோ கூடாது என்று அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்