Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நியூசிலந்து: திரையரங்கில் இரவு உடை அணியத் தடை

நியூசிலந்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் இரவு உடை அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
நியூசிலந்து: திரையரங்கில் இரவு உடை அணியத் தடை

படம்: Pixabay

நியூசிலந்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் இரவு உடை அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான காலணிகளை அணிந்து வருவோரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

திரையரங்கிற்கு அணிந்து வரப்படும் ஆடைகளின் தரத்தை உயர்த்துவதே அதன் நோக்கம்.

ஹவேரா திரையரங்கு அந்தப் புதிய விதிமுறையை நடப்பிற்குக் கொண்டு வந்துள்ளது. இரவு ஆடையில் வரும் ரசிகர்கள் உகந்த சூழலை ஏற்படுத்துவதில்லை என அதன் Facebook பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கின் நடவடிக்கை சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்