Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரிய அணுவாயுத நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாண நெடுநாள் பிடிக்கும் - டிரம்ப்

வடகொரிய அணுவாயுத நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாண நெடுநாள் பிடிக்கும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

வடகொரிய அணுவாயுத நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாண நெடுநாள் பிடிக்கும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வடகொரியா அதன் அணுசக்திச் சோதனைகளை நிறுத்த உறுதிதெரிவித்த மறுநாள் அவர் அவ்வாறு சொன்னார்.

திட்டமிட்டபடி அனைத்தும் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார் திரு டிரம்ப்.

அணுசக்தி, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்தவிருப்பதாகவும், அணுசக்திச் சோதனை தளத்தை அகற்றவிருப்பதாகவும் வடகொரியா நேற்று முன்தினம் கூறியது.

அவற்றுக்குப் பதிலாகப், பொருளியல் வளர்ச்சி, அமைதி ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாக வடகொரியா சொன்னது.

வடகொரியாவின் அந்த அறிவிப்பை உலக நாடுகள் வரவேற்றன.

இருப்பினும் வடகொரியாவின் உள் நோக்கம் குறித்து சில நாடுகள் அக்கறை தெரிவித்தன.

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong-un), தென்கொரிய தலைவர் மூன் ஜே இன் (Moon Jae-in) இருவரும் வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவிருக்கின்றனர்.

இரு கொரியாக்களுக்கும் இடையிலான உச்சநிலை மாநாடு சுமார் பத்தாண்டுக்குப் பிறகு, முதல் முறையாக நடைபெறவிருக்கிறது.

அது உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கவிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்