Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் மாண்ட அயர்லந்து பெண் - கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

மலேசியாவில் மாண்ட அயர்லந்தைச் சேர்ந்த 15 வயதுப் பெண் நோரா குய்ரினின் (Nora Quoirin) குடும்பத்தினர், அவருடைய மரணம் தொடர்பில் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் மாண்ட அயர்லந்தைச் சேர்ந்த 15 வயதுப் பெண் நோரா குய்ரினின் (Nora Quoirin) குடும்பத்தினர், அவருடைய மரணம் தொடர்பில் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

நோரா பத்து நாள்கள் தனித்து இருந்தது எப்படி? அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மீட்புக் குழுவினர் ஏற்கனவே சோதனை நடத்தியிருந்தனர். பிறகு, அதே இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது எப்படி? என்று நோராவின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் விடுமுறையைக் கழிப்பதற்காக மலேசியாவுக்குச் சென்ற நோராவின் குடும்பத்தினர், ஓர் உல்லாச விடுதியில் தங்கியிருந்தனர்.

இராண்டாம் நாள் காலையில் இருந்து நோரா காணாமல் போனார்.

பத்து நாட்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் நோராவின் உடலைக் கண்டுபிடித்தனர்.

விடுதியிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பசியாலும், மன உளைச்சலாலும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு நோரா மாண்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.

நோராவின் உடல் அயர்லந்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்