Images
  • nora
    (படங்கள்:  AFP, Bernama)

அயர்லந்துப் பெண்ணைத் தேட புதிய அவசர உதவி எண்ணைப் பயன்படுத்தும் மலேசியா

அயர்லந்தைச் சேர்ந்த 15 வயது நோரா குய்ரினை (Nora Quoirin) கண்டுபிடிக்க தற்போது மலேசிய அதிகாரிகள் புதிய அவசர உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்.

0111 2285058 அந்த புதிய அவசர எண்.

நோரா தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் மக்கள் அதன்மூலம் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

நோரா ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரை கடந்த ஒரு வாரமாக 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

காட்டு பகுதிகளில் தமது பெண்ணைத் தேடும் அதிகாரிகளுக்கு நோராவின் தாயார் தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நோராவை கண்டுபிடிக்க அதிகாரிகள், அவரது தாயார் நோராவை பெயர் சொல்லி அழைக்கும் பதிவை, மீண்டும் மீண்டும் காட்டுக்குள் ஒலிபரப்பி வருகின்றனர்.

லண்டனில் வசிக்கும் நோராவின் குடும்பத்தினர் ஆகஸ்ட் 3ஆம் தேதி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு இரண்டு வார விடுமுறைக்காக வந்திருந்தனர்.

நோரா சிறப்பு தேவை உடைய குழந்தை. 

Top