Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முழுமையான அணுவாயுதக் களைவிற்கு முன் வட கொரியா மீதான தடைகள் தளர்த்தப்படலாம்: சோல்

முழுமையான அணுவாயுதக் களைவிற்கு முன் வட கொரியா மீதான தடைகள் தளர்த்தப்படலாம்: சோல்

வாசிப்புநேரம் -
முழுமையான அணுவாயுதக் களைவிற்கு முன் வட கொரியா மீதான தடைகள் தளர்த்தப்படலாம்: சோல்

( படம்: AFP/KIM HONG-JI )

சோல்: வட கொரியா முழுமையான அணுவாயுதக் களைவுக்கு ஆக்ககரமான படிகளை எடுத்தால் அதன் மீதான தடைகள் தளர்த்தப்படலாம் எனத் தென் கொரியா தெரிவித்தது. தடைகளை அகற்றுவதன் தொடர்பில் வாஷிங்டனின் நிலைக்கு சற்று மாறுபட்டதாக அது உள்ளது.

வட கொரியா அணுவாயுக் களைவை முடித்த பிறகே தடைகள் அகற்றப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோ கூறியிருந்தார்.

கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பில் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுதக் களைவு குறித்த தமது கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்