Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நியூஸிலந்து: 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சதப் பெங்குவின்

நியூஸிலந்தின் தென்தீவில் மிகப்பெரிய பெங்குவின் ஒன்றின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்து: 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சதப் பெங்குவின்

(படம்: Canterbury Museum)

நியூஸிலந்தின் தென்தீவில் மிகப்பெரிய பெங்குவின் ஒன்றின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அது கிட்டத்தட்ட முழு வளர்ச்சியடைந்த மனிதனைப் போன்று இருந்திருக்கும் என்று கூறப்பட்டது.

உயிருடன் இருந்தபோது அது 1.6 மீட்டர் உயரம், 80 கிலோகிராம் எடையுடன் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய Emperor பெங்குவினின் எடையைப் போல அது 4 மடங்கு. உயரமும் 40 சென்டிமீட்டர் அதிகம்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த அந்த ராட்சதப் பெங்குவினின் கால் எலும்புகள் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

Paleocene காலக்கட்டத்தைச் சேர்ந்த அத்தகைய ராட்சதப் பெங்குவின் படிமங்கள் நியூசிலந்தில் கண்டுபிடிக்கப்பட்டது இது இரண்டாவது முறை.

நியூஸிலந்தின் பல்வேறு ராட்சதப் பறவை இனங்கள் இப்போது அழிந்துபோய்விட்டன.

சென்ற வாரம், கிரைஸ்ட்சர்ச் நகர அரும்பொருளகம் ஒரு மீட்டர் உயரங்கொண்ட கிளி பற்றிய தகவலை வெளியிட்டது. அந்தக் கிளி 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாய்க் கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்