Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் Ola கார் பகிர்வுச் சேவைகளோடு இணையும் ஸ்கூட்டர் சேவை

இந்தியாவில், கார் பகிர்வுச் சேவைகளை வழங்கும் Ola நிறுவனம், ஸ்கூட்டர்கள் பகிர்வு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் Ola கார் பகிர்வுச் சேவைகளோடு இணையும் ஸ்கூட்டர் சேவை

(படம்: Reuters/Anindito Mukherjee)

இந்தியாவில், கார் பகிர்வுச் சேவைகளை வழங்கும் Ola நிறுவனம், ஸ்கூட்டர்கள் பகிர்வு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யவிருக்கிறது.

Vogo எனும் ஸ்கூட்டர் பகிர்வு நிறுவனத்தில் Ola, 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக இரு நிறுவனங்களும் இன்று தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஸ்கூட்டர் சேவைகளை வழங்கிவரும் Vogo, புதிய முதலீட்டைக் கொண்டு புதிய 100,000 ஸ்கூட்டர்களை வாங்கவுள்ளது.

இதுவரை 100,000க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் 20 மில்லியன் கிலோமீட்டர் வரை தனது ஸ்கூட்டர்களில் பயணம் செய்துள்ளதாக, Vogo நிறுவனம் குறிப்பிட்டது.

இந்தியாவை மேலும் இணைக்க புதிய முதலீடு உதவும் என்று Ola நம்புகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்