Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலகின் ஆக வயதானவர் காலமானார்

உலகத்தின் ஆக வயதானவர் காலமானார். 117 வயது ஜப்பனிய மூதாட்டியான அவர், நேற்று இறந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
உலகின் ஆக வயதானவர் காலமானார்

(படம்: Channel NewsAsia)

உலகத்தின் ஆக வயதானவர் காலமானார். 117 வயது ஜப்பனிய மூதாட்டியான அவர், நேற்று இறந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருவாட்டி நாபி தஜிமா (Nabi Tajima) ஜனவரி மாதத்திலிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகத் தெரிகிறது.

1900 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்த திருவாட்டி தஜிமாவிற்கு இதுவரை 160 சந்ததியர் உள்ளனர்.

இதற்குமுன் ஜமைக்காவைச் சேர்ந்த உலகின் ஆக வயதான வயலெட் பிரௌன் (Violet Brown) என்றவர் தமது 117ஆம் வயதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறந்தார்.

அதைத் தொடர்ந்து திருவாட்டி தஜிமாவிற்கு உலகின் ஆக வயதானவர் என்று பட்டம் சூட்டப்பட்டு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடமும் கிடைத்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்