Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆரவாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்படலாம்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்படலாம் என உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.  

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆரவாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்படலாம்

படம்: AFP/Charly Triballeau

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்படலாம் என
உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

தோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை (8 நவம்பர்) நடந்த சீருடற்பயிற்சி (gymnastics) சோதனை நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

அவர்கள் ஆரவாரம் செய்யக்கூடாதென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஜப்பான் செல்லும் ஒலிம்பிக்ஸ் ரசிகர்களுக்கு இரண்டு வாரக் கட்டாயத் தனிமைப்படுத்தும் உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடும் என்று தோக்கியோ 2020 தலைமை நிர்வாகி திரு தோஷிரோ முட்டோ (Toshiro Muto) தெரிவித்தார்.

எனவே போட்டிகளைக் காண வருவோர் ஆரவாரம் செய்வதைத் தடுக்கத் திட்டமிடுவதாகச் செயற்குழுச் சந்திப்பில் தெரிவித்தார்.

சத்தம் போடுவதால் காற்றில் கிருமிகள் கலக்கும் அபாயம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

இருப்பினும் மக்கள் ஆரவாரம் செய்வதைத் தடை செய்வது சாத்தியமா என்பதைப் பற்றியும் சிந்திக்கவேண்டும் என்றார் திரு முட்டோ.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்