Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சோதனைப் பயிற்சிகள் தொடக்கம்

விளையாட்டு வீரர்களை மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் பத்திரமாகப் பாதுகாக்க முடியும் என ஜப்பானிய அதிகாரிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர். 

வாசிப்புநேரம் -
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சோதனைப் பயிற்சிகள் தொடக்கம்

(படம்:REUTERS/Issei Kato)


ஜப்பானில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான சோதனை நிகழ்ச்சிகள், அணுக்கமான மேற்பார்வையின்கீழ் தொடங்கியுள்ளன.

முக்குளித்தல், கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சிகள், முதலில் நடைபெற்றன.

அவற்றில், அனைத்துலகப் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

முக்குளிப்புக்கான போட்டியில், சீனா உள்ளிட்ட ஐம்பது நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் களம் இறங்குகின்றனர்.

அறைகளுக்கு உள்ளேயே தங்கியிருக்க வேண்டும். பிறரோடு பழக முடியாது. வெளிக் காற்றை சுவாசிக்க முடியாது... எனினும், இதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

- அமெரிக்கப் பெண் முக்குளிப்பாளர் சாரா பேக்கன் (Sarah Bacon)

உடற்குறையுள்ளோர் உள்பட 15,000 ஒலிம்பிக் வீரர்களும் வீராங்கனைகளும் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமிப் பரவல் சூழலில், விளையாட்டுகளைப் பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஏற்பாட்டாளர்கள் இன்னமும் சவால்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

விளையாட்டு வீரர்களை மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் பத்திரமாகப் பாதுகாக்க முடியும் என ஜப்பானிய அதிகாரிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.

எனினும், உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் இப்படிப்பட்ட சூழலில் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டின.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்