Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிக அளவில் வெளிநாட்டு ரசிகர்களை நாட்டுக்குள் அனுமதிக்க ஜப்பான் திட்டம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிக அளவில் வெளிநாட்டு ரசிகர்களை நாட்டுக்குள் அனுமதிக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிக அளவில் வெளிநாட்டு ரசிகர்களை நாட்டுக்குள் அனுமதிக்க ஜப்பான் திட்டம்

(படம்: REUTERS/Kim Kyung-hoon)

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிக அளவில் வெளிநாட்டு ரசிகர்களை நாட்டுக்குள் அனுமதிக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

ரசிகர்கள் COVID-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதோ தனிமைப்படுத்திக்கொள்வதோ கட்டாயமில்லை என்றும் கூறப்படுகிறது.

அந்தத் தகவலை ஜப்பானின் Nikkei நாளிதழ் வெளியிட்டது.

கிருமித்தொற்று இல்லை என்ற சான்றிதழ், கைத்தொலைபேசியில் தகவல் கண்டறியும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தல் போன்றவை மட்டும் கட்டாயமாக்கப்படும்.

இருப்பினும் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

வெளிநாட்டுப் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதுவரை சுமார் 1 மில்லியன் நுழைவுச்சீட்டுகளை வெளிநாட்டினருக்கு ஏற்பாட்டு குழு விற்றுள்ளது.

உள்நாட்டு ரசிகர்களுக்கு 4.5 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 11,000 விளையாட்டாளர்கள் தோக்கியோவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக போட்டியில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை ஜப்பான் குறைக்கக்கூடாது என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்