Images
  • onion
    (படம்: REUTERS/Rajendra Jadhav/File Photo)

வெங்காய ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடைவிதிக்கும் இந்தியா

இந்தியாவில் வெங்காய விலைகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதால், அந்நாட்டு அரசாங்கம் அவற்றின் ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதனையடுத்து, அரசாங்கம் அனைத்து விதமான வெங்காய ஏற்றுமதிக்கும் உடனடியாக நேற்று (செப்டம்பர் 15) தடைவிதித்தது.

தெற்காசிய உணவுகளில் அத்தியாவசியமான ஒன்று வெங்காயம். அதை உலகில் ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா.

இலங்கை, நேப்பாளம், மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்திய வெங்காயத்தை நம்பியுள்ளன.

ஒரு டன் வெங்காயத்தின் விலை தற்போது 30,000 ருபாய் ( 556 வெள்ளி).

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த்த கனத்த மழை வெங்காயத்தைச் சேதப்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் பயிரிடும் காலம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.


 

Top