Images
  • orang asli deaths (1)
    (படம்: Bernama)

மலேசியா: ஓராங் அஸ்லி பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மேலும் நால்வரின் உடல்கள் மீட்பு

மலேசியாவில் ஓராங் அஸ்லி பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மேலும் நால்வரின் உடல்கள், அவர்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

குவா மசாங் எனும் கிராமத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 14 பேர் மாண்டதற்கான காரணத்தை ஆராயும் பணியின் ஒருபகுதியாக அவை கண்டுபிடிக்கப்பட்டன.

முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் இரண்டை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.

அவர்கள் நிமோனியாவால் மாண்டு போயிருக்கக்கூடும் என ஆரம்பக்கட்ட சோதனையில் தெரியவந்தது.

மற்றவர்களுக்கு மரணம் எவ்வாறு நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த விசாரணை தொடர்கிறது.

மொத்தம் 12 பேரின் சடலங்களைத் தேடும் பணியில், 8 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய நால்வரின் சடலங்களே இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

25 வயது நபர் ஒருவரின் சடலம் இரண்டாம் முறையாகப் பிரேதப் பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

மாசடைந்த தண்ணீர்ப் பிரச்சினைக்கும் அவர்களின் மரணத்திற்கும் தொடர்பில்லை என்பதை அரசுத்தரப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கிளந்தானிள் மூத்த துணையமைச்சர் முகமது அமர் நிக் அப்துல்லா கூறியுள்ளார். 

Top