Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

துப்பாக்கி ரவையால் சுடப்பட்ட ஓராங் உத்தான் தேறி வருகிறது

இந்தோனேசியாவில் காற்றுத் துப்பாக்கியால் சுடப்பட்ட ஓராங் உத்தான் மெதுவாகக் குணமடைந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
துப்பாக்கி ரவையால் சுடப்பட்ட ஓராங் உத்தான் தேறி வருகிறது

படம்: AFP

இந்தோனேசியாவில் காற்றுத் துப்பாக்கியால் சுடப்பட்ட ஓராங் உத்தான் மெதுவாகக் குணமடைந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சே (Aceh) பகுதியில் 74 துப்பாக்கி ரவைகளால் தாக்கப்பட்ட அந்த 30 வயதுப் பெண் ஓராங் உத்தானுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன.

கிராமவாசி ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பலாமரத்தின் அடியில் விலங்கு காணப்பட்டது. அச்சுறுத்தலாக விலங்கைக் கருதிய கிராமவாசி அதனை வெளியே துரத்த முயன்றார்.

மற்ற கிராமவாசிகளிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள், விலங்கையும் அதன் ஒரு மாதக் குட்டியையும் மீட்டனர்.

ஆனால், ஓராங் உத்தான் குட்டி, ஊட்டச்சத்துக் குறைவால் மாண்டது.

கடந்த ஒரு வாரமாக அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் தாய் ஓராங் உத்தான், இப்போது குணமடைந்து வருகிறது.

அதற்கு 'Hope' என்ற பெயரிடப்பட்டது.

சம்பவத்தை அதிகாரிகள் விசாரிக்கப்போவதாகக் குறிப்பிட்டனர்.

தோட்டங்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதால் ஓராங் உத்தான் விலங்குகள் தாக்கப்படுகின்றன. செல்லப்பிராணிகளாக விற்கவும் அவை வேட்டையாடப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்