Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் : ஏழ்மை காரணமாக கள்ளச் சந்தையில் உடல் உறுப்பை விற்கும் மக்கள்

பிலிப்பீன்ஸில் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யும் போக்கு குறைந்தபாடில்லை.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸில் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யும் போக்கு குறைந்தபாடில்லை.

பணத் தேவைக்காக மக்கள் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை கள்ளச் சந்தையில் விற்பதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர்கள் தரகர்களை நாடுகின்றனர்.

பிலிப்பீன்ஸில் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை விற்க உதவும் தரகர்களுக்கு 20ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படுகின்றன.

இருப்பினும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தரகர்கள், வேறு வழியின்றி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர்.

சிறுநீரகத்தை விற்க முன்வரும் ஒருவரை, தரகர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றால் ஒரு நபருக்கு 14 வெள்ளி கிடைக்குமாம்.

தரகர்கள் உடல் உறுப்புகளை விற்க முன்வரும் மக்களைப் பொதுவாக ஏழ்மையான இடத்தில்தான் கண்டுபிடிப்பார்களாம்.

அரசாங்கம் போதிய நடவடிக்கைகள் எடுத்தாலும்
கள்ளச் சந்தையில் சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது கடினமான செயலாய் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இந்தியா, பிலிப்பீன்ஸ், சீனா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள் உடல் உறுப்புகளை கள்ளத்தனமாக விற்பனை செய்துவருவதாக, உலக சுகாதார நிறுவனம் 2007ஆம் ஆண்டு தெரிவித்தது.

பிலிப்பீன்ஸில், வாழும் ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தைத் தானமாகப் பெற சுமார் 2,300 டாலர் வரை கொடுக்க சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள் தயாராக உள்ளனர்.

செல்வந்தர்கள் இன்னும் அதிகமாகத் தரத் தயாராக உள்ளனர்.

பிலிப்பீன்ஸில், ரத்த பந்தம் உள்ளவர்கள் மட்டுமே நோயாளிகளுக்கு உறுப்புகளை தானம் செய்யலாம்.

அல்லது உணர்வுரீதியாக நெருக்கமானவர்கள், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாகப் பணிபுரிந்தோர்-ஆகியோரும் உறுப்புகளை தானம் செய்யமுடியும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்