Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: ஒசாகா நகரில் அதிகரிக்கும் நோய்ப்பரவல் - நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டுகோள்

ஜப்பான்: ஒசாகா நகரில் அதிகரிக்கும் நோய்ப்பரவல் - நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டுகோள் 

வாசிப்புநேரம் -

ஜப்பானின் ஒசாகா நகரில் அதிகரித்துவரும் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, அங்கு நெருக்கடிநிலையை அறிவிக்குமாறு அந்நகரின் நிர்வாகம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளவிருக்கிறது.

தற்போது அந்த நகரிலும் தலைநகர் தோக்கியோ உள்ளிட்ட 5 வட்டாரங்களிலும் அடுத்த மாதம்வரை பகுதி நெருக்கடிநிலை நடப்பில் உள்ளது.

குறிப்பாக ஒசாகா நகரில் நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்று அங்கு 1,200க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

மருத்துவச் சேவைகளுக்கான தேவை அங்கு வெகுவாக அதிகரித்துள்ளதால் விரிவான நெருக்கடிநிலை அவசியம் என்று ஒசாகா நகர அதிகாரிகள் கூறுகின்றனர்.

4ஆவது முறையாக ஏற்பட்டுள்ள கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, ஜப்பான் போராடிவருகிறது.

அடுத்த வாரம் அனுசரிக்கப்படவிருக்கும் ஒருவார விடுமுறைக் காலத்தின்போது வட்டாரங்களுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga), மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்