Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோலாலம்பூர் விமான நிலைத்திற்கு அருகே சுற்றும் நீர்நாய்கள்

கோலாலம்பூர் விமான நிலைத்திற்கு அருகே நீர்நாய்கள் சுற்றித் திரிவதாக Twitter பக்கத்தில் படங்கள் வெளியாகியுள்ளன.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர் விமான நிலைத்திற்கு அருகே நீர்நாய்கள் சுற்றித் திரிவதாக Twitter பக்கத்தில் படங்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கோலாலம்பூரில் நீர்நாய்கள் தென்பட்டதாக, மலேசியாவின் Malay Mail நாளேடு கூறியிருந்தது.

படங்களை வெளியிட்ட விமான நிலைய அதிகாரிகள் "நீர்நாய்கள் பயணிகளுக்கு உதவத் தயாராய் உள்ளன" என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டிருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் நீர்நாய்கள் தொடர்பாக மக்கள் மகிழ்ச்சியான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நீர்நாய்களின் அருகே செல்ல வேண்டாம் என்றும் அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் மக்களுக்கு அறிவுரை கூறினர்.

நகர்ப் புறங்களில் நீர்நாய்களைக் காண்பது அரிது...
பொதுவாக அவற்றைக் கடலோரப் பகுதிகளிலும், ஆறு, சதுப்புநிலம், ஏரிப் பகுதிகளிலும் காணலாம்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், இயற்கையான சதுப்பு நிலத்துக்கு அருகே அமைந்துள்ளது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்