Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பூனைகளுக்குச் சிறுநீரக நோய் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் ஆய்வு - 2.7 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கிய ஜப்பானியர்கள்

பூனைகளின் சிறுநீரகக் கோளாற்றைத் தடுப்பது எப்படி என்பதைக் கண்டறிய உதவும் ஆய்வுக்காக ஜப்பானியர்கள் மொத்தம் 2.7 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
பூனைகளுக்குச் சிறுநீரக நோய் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் ஆய்வு - 2.7 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கிய ஜப்பானியர்கள்

(படம்:AFP/Mandel Ngan)

பூனைகளின் சிறுநீரகக் கோளாற்றைத் தடுப்பது எப்படி என்பதைக் கண்டறிய உதவும் ஆய்வுக்காக ஜப்பானியர்கள் மொத்தம் 2.7 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

கிருமிப்பரவல் சூழலால் ஜப்பானியப் பொருளியல் பாதிப்படைந்ததால், தோக்கியோ பல்கலைக்கழக ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டது.

அதுபற்றிய தகவல் வெளியானதும், பூனைப் பிரியர்களான ஜப்பானியர்கள் ஆயிரக்கணக்கானோர் நன்கொடை வழங்கத் தொடங்கினர்.

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் பூனைகளுக்குச் சிறுநீரகக் கோளாற்றுக்கான வாய்ப்புகள் அதிகம். மரபணு ரீதியாக ஒரு புரதம் சுரக்காததால், அதுபோன்ற குறைபாடு ஏற்படுவதாகத் தோக்கியோ ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

AIM எனும் புரதத்தின் மூலம், பூனையின் உடலில் உள்ள மடிந்த செல்களும், கழிவுகளும் அகற்றப்படுகின்றன. அதனால் சிறுநீரகம் நிரம்பாது - கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பூனைகளுக்கு மறுவாழ்வளித்து அவற்றை 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ வைக்க முற்படுகின்றனர் ஆய்வாளர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்