Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிராணவாயுவின் விலையைக் கூட்டும் உற்பத்தியாளர்கள்...அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் இந்தியா

இந்திய அரசாங்கம், மருத்துவரீதியாகப் பயன்படுத்தப்படும் பிராணவாயுவிற்கு அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்திய அரசாங்கம், மருத்துவரீதியாகப் பயன்படுத்தப்படும் பிராணவாயுவிற்கு அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்துள்ளது.

உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் பிராணவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாக அது கூறியது.

அதனால், COVID-19 நோய்த்தொற்று, மற்ற சுவாச நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், சில மருத்துவமனைகள் பிராணவாயுவை வாங்கிக் குவிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பிராணவாயு கட்டுப்படியான விலையில் விற்கப்படுவதை உறுதிசெய்ய அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் பிராணவாயு இனி, அதிகபட்சமாக ஒரு கனசதுர மீட்டருக்கு 15.22 ரூபாய் விலை என்று விற்கப்படவேண்டும்.

பயனீட்டாளர்களுக்கு கலன் அளவில் விற்கப்படும் பிராணவாயு இனி, ஒரு கனசதுர மீட்டருக்கு 25.71 ரூபாய் விலை என்று விற்கப்படவேண்டும்.

அது 6 மாதங்களுக்கு நடப்பில் இருக்கும்.

இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வேளையில், மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் பிராணவாயுவிற்கான தேவை நாளொன்றுக்கு 2,800 டன் வரை அதிகரித்துள்ளது.

அது முன்பை விட 4 மடங்கு அதிகம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்