Images
  • Pak flight
    படம்: REUTERS

பாகிஸ்தான் விமான விபத்து: விமானத்தின் தகவல்பதிவுப் பெட்டி மீட்கப்பட்டது

பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் தகவல்பதிவுப் பெட்டியும் குரல்பதிவுப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான இடத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக Pakistan International Airlines நிறுவனத்தின் பேச்சாளர் வெளியிட்டார்.

தகவல்பதிவுப் பெட்டியை விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டதாக அவர் கூறினார்.

Pakistan International Airlines நிறுவனத்தின் PK 8303 விமானம் நேற்று லாகூரிலிருந்து கராச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கராச்சியின் குடியிருப்பாளர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அந்த விமானத்தில் 91 பயணிகளும், 8 சிப்பந்திகளும் இருந்தனர்.

அவர்களில் 97 பேர் மாண்டனர்.

இருவர் உயிர்பிழைத்தனர்.  

Top