Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நூற்றுக்கும் மேற்பட்ட விமானிகளின் உரிமம் போலி - சர்ச்சையில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

நூற்றுக்கும் மேற்பட்ட விமானிகளின் உரிமம் போலி - சர்ச்சையில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

வாசிப்புநேரம் -
நூற்றுக்கும் மேற்பட்ட விமானிகளின் உரிமம் போலி - சர்ச்சையில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

(கோப்புப் படம்:AFP/FAROOQ NAEEM)

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினரின் உரிமம் போலியானது என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சிக்கலில் இருக்கும் விமான நிறுவனம் இந்த மோசடியிலிருந்து மீண்டுவர முடியுமா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

பல விமானிகளின் உரிமம் நம்பகமான முறையில் பெறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து நிறுவனம் தனது 434 விமானிகளில் 141 பேரை உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்போவதாய்க் கூறியது.

போலிச் சான்றிதழ்களைக் கொண்டோ, தங்களுக்குப் பதில் வேறு ஒருவரைக் கொண்டு தேர்வு எழுதியோ அவர்கள் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

சென்ற மாதம் கராச்சி நகரில் நிகழ்ந்த மோசமான விமான விபத்தில் 98 பேர் மாண்டனர். விபத்துக்கு இரு விமானிகளும் காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.

விமானிகள் இருவரும் கொரோனா கிருமிப்பரவல் குறித்துப் பேசிக்கொண்டே, சக்கரங்களை வெளியேற்றாமல் விமானத்தைத் தரையிறக்க முயன்றாதாகக் கூறப்படுகிறது. அது விமான இயந்திரத்தைக் கடுமையாகச் சேதப்படுத்தியது.

சக்தியிழந்த விமானம், இரண்டாவது முயற்சியில் அருகில் இருந்த வீடுகளின் மேல் விழுந்து நொறுங்கியது.

மற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரையும் சேர்த்து பாகிஸ்தானின் 860 விமானிகளில் 262 பேரின் உரிமம் போலியானது என்பது தெரியவந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்