Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானில் புலம்பெயரும் பறவைக்கூட்டம்

பாகிஸ்தானில் புலம்பெயரும் பறவைக்கூட்டம்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானில் புலம்பெயரும் பறவைக்கூட்டம்

படம்: REUTERS

தெற்குப் பாகிஸ்தானில் இந்த வருடம் புலம்பெயரும் பறவைகள் அதிகமாகக் காணப்பட்டன.

சென்ற ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 250 ஆயிரம் பறவைகள் சிந்து மாநிலத்தில் காணப்பட்டன.

இந்த ஆண்டு மேலும் அதிகமான பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன. சுமார் 740 ஆயிரம் பறவைகள் அந்த மாநிலத்தில் தென்பட்டன.

COVID-19 நோய்ப்பரவல் காரணத்தால் வேடர்கள் வெளியே சென்று பறவைகளை வேட்டையாட முடியவில்லை.

பறவைகளுக்கு அது பாதுகாப்பான சுற்றுச்சூழலை அளித்துள்ளது என்று வனவிலங்குப் புகைப்படக்காரரான அஹமர் அலி ரிஸ்வி கூறினார்.

வழக்கத்தைவிட அதிகக் காலத்திற்குப் பறவைகள் சிந்துமாநிலத்தில் தங்கியிருந்தன என்றார் அவர்.

அந்த இடத்தில் வேடர்களின் தொல்லையினால் பல அரிய விலங்குகள் அச்சுறுத்தலை எதிர்நோக்கின என்று அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்