Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானில் அதிகரித்துள்ள நோய்த்தொற்றுச் சம்பவங்கள்- எல்லைகள் மூடப்பட்டன

 பாகிஸ்தானில் அதிகரித்துள்ள நோய்த்தொற்றுச் சம்பவங்கள்- எல்லைகள் மூடப்பட்டன 

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானில் அதிகரித்துள்ள நோய்த்தொற்றுச் சம்பவங்கள்- எல்லைகள் மூடப்பட்டன

படம்: AFP

பாகிஸ்தானில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் தனது எல்லைகளை அது மூடியுள்ளது.

வரும் வாரங்கள் நோய்ப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவை என்று பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரித்தது.

ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தரை வழியாக மக்கள் பாகிஸ்தானுக்குள் வர முடியாது.

அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கும் அங்கு இரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக வெளிநாடு சென்றுள்ள ஊழியர்கள் நோன்புப் பண்டிகையையொட்டி மீண்டும் நாட்டிற்குள் வரக்கூடும் என்பதையும் பாகிஸ்தான் கருத்தில் கொண்டது.

அண்டை நாடுகளில் ஏற்பட்டு வரும் நோய்ப்பரவலையும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது கூறியது.

தற்போது பாகிஸ்தானில் மூன்றாம் கட்ட நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை அங்கு 800,000-க்கும் அதிகமானோருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

- AFP/rw  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்