Images
  • Pakistan Crash
    (படம்: AFP/STR)

பாகிஸ்தான்: இரண்டு ரயில்கள் மோதி விபத்து - 9 பேர் மரணம்

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 9 பேர் மாண்டனர்.

60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இன்று அந்த விபத்து ஏற்பட்டது.

லாகூரிலிருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதியது.

குறைந்தது 9 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பக்கத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூவரின் நிலை கவலைக்கிடமாய் இருப்பதாகக் கூறப்பட்டது.  

Top