Images
  • Pakistan Denies Airspace
    (படம்: AFP/Prakash Singh)

பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்துவதற்கு இந்திய அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு


இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், ஐஸ்லந்து செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை இஸ்லாமாபாத் (Islamabad) நிராகரித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தொடரும் வேளையில் இஸ்லாமாபாத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்திய அதிபர் ராம்நாத் அதிகாரபூர்வ பயணமாக அடுத்த வாரம் ஐஸ்லந்து செல்லவிருக்கிறார்.

வழக்கமாக முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அனுமதி இம்முறை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக இந்திய அரசாங்கம் கூறியது.

அத்தகைய தன்னிச்சையான முடிவுகள் அர்த்தமற்றவை என்பதைப் பாகிஸ்தான் உணரவேண்டும் என்று புதுடில்லி கூறியது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் வட்டாரத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இந்தியா சென்ற மாதம் நீக்கியதற்குப் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.

பின்னர், பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக, அரசதந்திர உறவுகளைத் தற்காலிகமாகத் துண்டித்து கொண்டது. 

Top