Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தான்: சீனத் தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு - குறைந்தது 4 பேர் மரணம்

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான குவெட்டாவில் (Quetta), சீனத் தூதர் தங்கியிருந்த சொகுசு ஹோட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான்: சீனத் தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு - குறைந்தது 4 பேர் மரணம்

(கோப்புப்படம்: AP/Arshad Butt)

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான குவெட்டாவில் (Quetta), சீனத் தூதர் தங்கியிருந்த சொகுசு ஹோட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.

10 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

செரேனா (Serena) சொகுசு ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் அந்தத் தாக்குதல் நடந்தது.

காயமுற்றோரில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அந்த ஹோட்டலில் பாகிஸ்தானுக்கான சீனத் தூதருடன் மேலும் 3 பேர் தங்கியிருந்தனர்.

தாக்குதல் நடந்தபோது, சீனத் தூதர் ஹோட்டலில் இல்லை எனப் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

வெடிபொருள் நிறைந்த கார் ஒன்று வெடித்ததாக அவர் ARY செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.

எனினும், மூத்தக் காவல்துறை அதிகாரி ஒருவர், வெடிகுண்டு வாகனத்தில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மற்ற பாதுகாப்பு அதிகாரிகள், கார் ஒன்று கார் நிறுத்துமிடத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில், வெடிகுண்டு வெடித்ததாகக் கூறினர்.

இதற்கிடையில், பாக்கிஸ்தானின் தலிபான் அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

அது தற்கொலைத் தாக்குதல் என அமைப்பு சொன்னது.

- Agencies/ec/aj 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்