Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானில், விமானிகளுக்கான புதிய உரிமம் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஆலோசனை

அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைப்பு, விமானிகளுக்கான புதிய உரிமம் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைப்பு, விமானிகளுக்கான புதிய உரிமம் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

50 விமானிகளும் சிவில் ஆகாயப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் 5 பேரும் பாகிஸ்தானில், குற்றவியல் வழக்கை எதிர்நோக்கும் நிலையில் அந்த ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

விமானிகள், போலிச் சான்றிதழ்கள் மூலம் உரிமங்களைப் பெற அந்த அதிகாரிகள் உதவியதாக நம்பப்படுகிறது.

பாக்கிஸ்தான் அனைத்துலக விமானம் ஒன்று, மே மாதம் கராச்சியில் விழுந்து நொறுங்கியதில் 97 பேர் மாண்டனர்.

அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது போலி விமான உரிமங்கள் குறித்துத் தெரியவந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்