Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'எங்கு திரும்பினும் தீ, அலறல்'-பாகிஸ்தான் விமான விபத்தில் உயிர்தப்பியவர்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 97 பேர் உயிரிழந்தனர்.

வாசிப்புநேரம் -

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 97 பேர் உயிரிழந்தனர்.

நாளை நோன்புப் பெருநாளைக் குடும்பத்துடன் கொண்டாடத் திட்டமிட்டிருந்த பலரை ஏற்றிக்கொண்டு விமானம் லாகூர் நகரிலிருந்து கராச்சி சென்று கொண்டிருந்தது.

விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். அதில் ஒருவர் தாம் கண்ட காட்சிகளை செய்தியாளர்களிடம் விவரித்தார்.

முகமது ஸுபைர் எனும் அந்த ஆடவர் எங்கு திரும்பினும் தீயை மட்டுமே காண முடிந்ததாய்க் கூறினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தம்மைச் சுற்றித் தீப்பிழம்புகள் மட்டுமே தெரிந்ததாக அவர் சொன்னார்.

ஒருமுறை தரையிறங்க முற்பட்ட விமானம், மறுமுறை 10இலிருந்து 15 நிமிடங்களில் விழுந்து சிதறியது.

விமானம் விழுந்து நொறுங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றார் முகமது. விமானம் நொறுங்கியதும் நினைவிழந்த முகமது, விழித்து எழுந்தபோது, பயணிகளின் அலறலையும், அழுகுரலையும் மட்டுமே கேட்க முடிந்ததாகச் சொன்னார்.

ஒருவரும் கண்ணில் படவில்லை ...எல்லாம் தீப்பிழம்புகள்.

என்றார் அவர்.

இருக்கை வாரைக் கழற்றி உடனடியாக வெளிச்சம் வந்த திசையை நோக்கிச் சென்று, சுமார் 3 மீட்டர் கீழே குதித்துத் தப்பியதாய் அவர் தெரிவித்தார்.

Pakistan International Airlines நிறுவனத்தின் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

COVID-19 கிருமிப்பரவலால் நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவைகளை சில நாள்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்