Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தான்: உளவுத் தொழில்நுட்பம் மூலம் COVID-19 நோயாளிகளை அடையாளம் காணும் திட்டம்

பாகிஸ்தான், ராணுவப் படையினரைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் உளவுத் தொழில்நுட்பத்தை வைத்து COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளங்கண்டு வருகிறது. 

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான்: உளவுத் தொழில்நுட்பம் மூலம் COVID-19 நோயாளிகளை அடையாளம் காணும் திட்டம்

AFP/Aamir QURESHI

பாகிஸ்தான், ராணுவப் படையினரைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் உளவுத் தொழில்நுட்பத்தை வைத்து COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளங்கண்டு வருகிறது.

நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறிய அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

அதற்காக உளவு ஆணையத்தின் உதவியை பாகிஸ்தான் அரசாங்கம் நாடியுள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அந்தத் திட்டம் துணை நிற்கும் என்று கருதப்படுகிறது.

திட்டம் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் அதில் Geofencing என அழைக்கப்படும் மின்னியல் வேலித் திட்டம்,

தொலைபேசிகளைக் கண்காணிக்கும் நடைமுறை போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக AFP செய்தி நிறுவனத்திடம் இரண்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அது பொதுவாகக் கிளர்ச்சியாளர்களையும் வெளிநாட்டு ராணுவப் படையினரையும் கண்டறிய பயன்படுத்தப்படுபவை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்