Images
  • pakistan train
    (படம்: AP Photo/Waleed Saddique)

பாகிஸ்தானில் நேர்ந்த ரயில் விபத்தில் குறைந்தது 63 பேர் மரணம்

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் 2 ரயில்கள் விபத்துக்குள்ளானதில், மாண்டோர் எண்ணிக்கை 63க்கு உயர்ந்துள்ளது.

100க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகப் பாகிஸ்தான் ரயில்வேயின் பேச்சாளர் கூறினார்.

மாண்ட பயணிகளில் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 12 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு ரயில்களிலும் மொத்தம் 1,200 பயணிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.

உள்ளூர் நேரப்படிப் பின்னிரவு மூன்றரை மணிக்கு விபத்து நேர்ந்ததால், பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கோர விபத்து, தமக்கு அதிர்ச்சியை அளித்ததாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் Twitter பக்கத்தில் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்பு குறித்து, விரிவான விசாரணை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். 

Top