Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா : அன்வார் இப்ராஹிமின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்த மாமன்னர்

மலேசிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை, மாமன்னர் ஒத்தி வைத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

மலேசிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை, மாமன்னர் ஒத்தி வைத்திருக்கிறார்.

எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஜனநாயக செயல் கட்சியும், அமானா (Amanah) கட்சியும் அதனைத் தெரிவித்தன.

அந்தக் கட்சிகளின் மூத்த தலைவர்கள்,
மாமன்னரைத் தனித்தனியே சந்திக்க வருமாறு முதலில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், நேற்றிரவு மாமன்னரின் மூத்த அந்தரங்கச் செயலாளர் அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாகத் தங்களிடம் தெரிவித்தார் என, தலைவர்கள் கூறினர்.

புதிய சந்திப்புக்கான தேதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அவர்கள் குறிப்பிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்