Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் தனியார் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொலை

மலேசியாவில் பாலஸ்தீன வரிவுரையாளர் தனியார் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் தனியார் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொலை

(படம்: Bernama)

மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் தனியார் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜாலான் மெராண்டியில் (Jalan Meranti) உள்ள கூட்டுரிமை வீட்டுக்கு தொழுகைக்காக அவர் சென்றுகொண்டிருந்தபோது சுடப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவரில் ஒருவர் டாக்டர் ஃபாடி அல் பாட்ஷைச் (Fadi Al Batsh) சுட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

இன்று காலை ஆறு மணிக்கு பாதசாரிகளுக்குரிய பாதையில்
நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.

பத்து முறை அவர் சுடப்பட்டார் என்றும் அவற்றில் நான்கு குண்டுகள் அவரின் தலையிலும் உடலிலும் பாய்ந்ததாக மலேசியக் காவல்துறை தெரவித்தது.

டாக்டர் ஃபாடி அதே இடத்தில் மாண்டார். கொலைக்கான நோக்கத்தைக் கண்டறிய மலேசியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்