Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பனை எண்ணெய் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் இந்தியா - மலேசியா கவலை

மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடு விதிப்பதால், மலேசியா அக்கறை தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடு விதிப்பதால், மலேசியா அக்கறை தெரிவித்துள்ளது.

என்றாலும், தம் நாட்டுக்குப் பொருளியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டாலும், தவறுகளைக் கண்டிக்கத் தயங்கப் போவதில்லை என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறினார்.

உலகில் பனை எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றில் இரண்டாவது பெரிய நாடாகத் திகழ்கிறது மலேசியா.

உலகில் உணவுக்காக ஆக அதிகமாக எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா.

அது கடந்த வாரம் தனது விதிகளை மாற்றியது. அந்த மாற்றம், மலேசியாவின் பனை எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்யக்கூடும் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.

அண்மையில், இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டத்தை மலேசியப் பிரதமர் முகமது சாடியதைத் தொடர்ந்து அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்