Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: ஐஸ்கட்டி கேக்குடன் பாண்டாவுக்குப் பிறந்தநாள்

மலேசியாவின் விலங்கியல் தோட்டத்தில் பிறந்த பாண்டா அதன் முதல் பிறந்தநாளை இன்று (ஜனவரி 14) "ஐஸ்கட்டி கேக்"-உடன் கொண்டாடியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
மலேசியா: ஐஸ்கட்டி கேக்குடன் பாண்டாவுக்குப் பிறந்தநாள்

(படம்: Facebook/Zoo Negara Malaysia)

மலேசியாவின் விலங்கியல் தோட்டத்தில் பிறந்த பாண்டா அதன் முதல் பிறந்தநாளை இன்று (ஜனவரி 14) "ஐஸ்கட்டி கேக்"-உடன் கொண்டாடியிருக்கிறது.

ஆனால் கேக்கிலிருந்த சில காரட் துண்டுகளைச் சுவைத்துவிட்டு, பாண்டா அசதியில் தூங்கிப்போனதாம்.

சீனாவிலிருந்து மலேசியாவிற்கு 2014ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட லியாங் லியாங் (Liang Liang) மற்றும் சிங் சிங் (Xing Xing) பெற்றெடுத்திருக்கும் இரண்டாம் குட்டி அது.

34 கிலோ கிராம் எடைக்கொண்ட அந்தப் பாண்டாவிற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

லியாங் லியாங்கிற்கும் சிங் சிங்கிற்கும் பிறந்த முதல் குட்டியான நுவான் நுவான் (Nuan Nuan) 2017ஆம் ஆண்டு சீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்