Images
  • pangolins (1)
    (படம்: AFP / Mohd RASFAN)

செதில்களை எரித்து விலங்குக் கடத்தலைத் தடுக்க முயற்சி எடுக்கும் மலேசியா

ஆப்பிரிக்காவிலிருந்து விலங்குகளின் கடத்தலைத் தடுக்க மலேசியா புதிய முயற்சியை எடுத்துள்ளது.

சுமார் 3 டன் எடையுள்ள பறிமுதல் செய்யப்பட்ட பென்கலின் விலங்குகளின் செதில்களை அந்நாடு எரித்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 9 மில்லியன் டாலர்.

செதில்களை எரித்தது கடத்தல் கும்பல்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று மலேசிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அந்த அளவிலான செதில்களைச் சேகரிக்க 3,000 பென்கலின்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் செதில்கள் கடத்தப்பட்டன.

ஆப்பிரிக்காவின் கெமரூன், கானா ஆகிய நாடுகளிலிருந்து கடத்தப்பட்டு செதில்கள் வழக்கமாக சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படும்.
 

Top